உசிலம்பட்டி: `தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனும் உயிரிழந்த சம்பவம் - தந்தையர் தினத்தில் நடந்த சோகம்

தந்தையர் தினத்தன்று தந்தை இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பால்ச்சாமி, விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

மகன் ராமையா, உத்தப்புரம் நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சூழலில், பணி நிமித்தமாக சமத்துவபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ராமையா - பால்ச்சாமி

இந்நிலையில் நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக தந்தை பால்ச்சாமி இறந்துவிட்டதாக வந்த தகவலால் அதிரச்சி அடைந்த ராமையா, நேரில் வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது மயங்கி விழுந்தாகவும், மயங்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்துபோது மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு ராமையாவின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து தந்தையின் உடலுக்கு அருகில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சர்வதேச தந்தையர் தினத்தை அனைவரும் கொண்டாடி வந்த நாளில் தந்தை இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.