துபாய்: தீப்பிடித்த 67 மாடி கட்டடம்; ஜீரோ காயம், உயிரிழப்புகள் - தீயணைப்பு துறையின் துரிதம்!

துபாயில் இருக்கும் 67 மாடி குடியிருப்பு மெரினா பினாக்கில். இந்தக் குடியிருப்பிற்கு டைகர் டவர் என்று இன்னொரு பெயரும் உண்டு.

767 அப்பார்ட்மென்டுகள் இருக்கும் இந்தக் குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

துரிதமாக களத்தில் இறங்கிய துபாயின் சிவில் பாதுகாப்பு படை கிட்டத்தட்ட 6 மணிநேரம் தொடர்ந்து பணியாற்றி தீயை அணைத்துள்ளது. மேலும், அந்தக் கட்டடத்தில் அப்போது இருந்த 3,820 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

மெரினா பினாக்கில் தீ விபத்து

இந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுவது புதிது அல்ல. கடந்த 2015-ம் ஆண்டு, 47-வது மாடியில் இருக்கும் சமையலறையில் பரவிய தீ, 48-வது மாடியிலும் பரவி தீ விபத்து ஏற்பட்டிருந்ததாக துபாய் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்காலிக வசிப்பிடத்தை ஏற்படுத்தி தருமாறு அந்தக் கட்டடத்தின் டெவலப்பர்களுக்கு துபாய் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழப்பு மற்றும் காயம் என எதுவுமே ஏற்படாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.