புனே: 60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து விபத்து; ஆற்று வெள்ளத்தில் பலர் மூழ்கிய சோகம்..

மஹாராஷ்டிரா புனே அருகில் உள்ளது குண்டமாலா கிராமம். இந்தக் கிராமத்தின் அருகில் ஓடும் இந்திராயானி ஆற்றின் இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 - 15 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 6 பேர் காப்பற்றப்பட்டிருக்கின்றனர்.

60 ஆண்டு பழமையான இந்தப் பாலத்தின் மேல், விடுமுறை நாள் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கூடியிருக்கின்றனர். அதனால், இந்த பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களாக, இந்தப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், ஆற்றில் உள்ள தண்ணீரின் அளவு கூடியிருக்கிறது. இது மீட்பு படையினருக்கு தங்களது வேலையை கடினமாக்கி உள்ளது. ஆனாலும், மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பாலத்தை புனரமைப்பு செய்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பாலத்தின் ஆபத்து தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இங்கே வருகின்றனர் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

கடந்த நான்கு நாள்களில், இந்தியாவில் நடக்கும் மூன்றாவது பெரிய துயர சம்பவம் இது. இது குறித்து மாநில முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மாவல் அருகில் உள்ள குந்த்மாலா சுற்றுலா மையத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. சிலரை தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. அவர்களை தேடும்பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.