பாமக: வடிவேல் இராவணன் நீக்கம்; பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளர்- ராமதாஸ் உத்தரவு
பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று( ஜூன் 15) நடைபெற்று வருகிறது. ராமதாஸால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கரை பாமகவின் பொதுச்செயலாளராக அறிவித்திருக்கிறார் ராமதாஸ்.


கடந்த முறை செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணனைக் காணவில்லை. ஏதோவொரு செவன் ஸ்டார் ஹோட்டலில் மது அருந்திக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அவரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு 100 ரூபாய் வழங்கலாம் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


