உத்தரகாண்ட்: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; 7 பேர் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 7 பேர் பயணித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணியில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரின் நிலை என்ன? என்பது குறித்து அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில் தற்போது அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் விமானி மற்றும் 5 பெரியவர்கள், 1 குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேதார்நாத் பள்ளத்தாக்கின் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


