இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி: மத்திய கிழக்கில் பதற்றம்; மோதலை கைவிட ஐ.நா கோரிக்கை
தங்கள் நாட்டின் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய இடைவிடாது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதில் மத்திய இஸ்ரேலில் இருவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் - ஈரான் மோதலைக் கைவிட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவும் அதிகரிக்கும் மோதல் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் பதற்றம் குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரேஸ், “ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் எதிர் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. அமைதியும், ராஜதந்திரமும் மேலோங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


