``டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம் - மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

2018 முதல் 2024 வரை அலெக்சாண்டர் விமான குழுவினர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அணுகும் முறையை பயன்படுத்தி அவர்களுக்கான சலுகைகள் மூலம் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

Flight (Representational Image)

அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஸ்பிரிட், யுனைடெட், டெல்டா போன்ற முக்கிய அமெரிக்க விமான நிறுவனங்களில் டிக்கெட் வாங்காமல் இப்படி ஏமாற்றி பயணித்துள்ளார்.

அலெக்சாண்டர் 2015 ஆம் ஆண்டு முதல் விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலும் அவர் ஒருபோதும் விமான பணிப்பெண்ணாகவோ அல்லது விமானியாகவோ பணியாற்றவில்லை என்று NBC செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவர் விமான குழுவினர் பயன்படுத்தக்கூடிய சலுகைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

விமான பணிப்பெண் அல்லது ஊழியர் உறுப்பினராக காண்பித்துக் கொண்டு 30 வெவ்வேறு பேட்ச் எண்கள் பயன்படுத்தி இவர் விமானத்தில் இலவசமாக பயணித்திருக்கிறார்.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வர இவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளித்துள்ளது.

இந்த மோசடிக்காக அலெக்சாண்டர் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுள்ளார். மேலும் $250,000 (தோராயமாக ரூ.2.15 கோடி) வரை அபராதம் அவருக்கு விதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.