சமீப காலத்துல என்னை ரொம்ப பாதிச்ச படம்..! - பி.சி. ஸ்ரீராம் | Ananda Vikatan Cinema Awards 2024

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.

அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

தேனி ஈஸ்வர்

இதில், 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை, வாழை படத்துக்காக ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கு வழங்கப்பட்டது. விருதை ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வழங்கினார்.

தொடர்ந்து வாழை படம் குறித்து பேசிய ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், "மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தை பார்க்க கூப்பிட்ட பொழுது ஒரு புதிய கதைகளத்தை நான் பார்த்தேன். அந்தத் திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது. படம் பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் யார் என்றெல்லாம் யோசிக்கவே முடியவில்லை.

பி.சி. ஸ்ரீராம் - தேனி ஈஸ்வர்
பி.சி. ஸ்ரீராம் - தேனி ஈஸ்வர்

கதையும் தாக்கம் அந்த மாதிரி. நான் நகரத்துல வளர்ந்தவன். சமீப காலத்தில் என்னை தாக்கிய படம் வாழை. பிறகு இந்த திரைப்படத்திற்கு யார் ஒளிப்பதிவாளர் என்று பார்க்கும் பொழுதுதான் தேனி ஈஸ்வர் இருக்கிறார். அது தான் உண்மையான வெற்றி" என்று கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.