Ahmedabad Plane Crash : அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை... - விஜய் வருத்தம்!
தவெக கல்வி விழா!
தவெக தலைவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில் அகமதாபாத் விமான விபத்து குறித்து விஜய் பேசியிருக்கிறார்.
அகமதாபாத் விபத்து!
நேற்று அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே அருகிலிருந்த கட்டிப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக இந்த விபத்து பார்க்கப்படுகிறது. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து விரைவாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய் மெளன அஞ்சலி!
இந்நிலையில், தவெக சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் ஒரு தனியார் விடுதியில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பாக பேசிய விஜய், குஜராத்தில் மிக மோசமான சோகமான விபத்து நடந்திருக்கிறது. அந்த விபத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்தாலே மனமெல்லாம் பதறுகிறது.

அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை இது. அந்த விபத்துல உயிரிழந்தவங்களுக்காக ஒரு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம். என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

