அகமதாபாத் விமான விபத்து: ``விமானி என் நண்பர்தான்- 12th Fail பட நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி உருக்கம்
இந்தியாவின் மிகவும் துன்பமான தினங்களில் ஒன்று நேற்று. குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியாகியிருக்கின்றனர்.
அதில் ஒருவர் 12th ஃபைல் திரைப்படத்தின் நாயகன் விக்ராந்த் மெஸ்ஸியின் நண்பர் விமானி கிளைவ் குந்தர்.
விமானியாகப் பணியாற்றிய அவரின் மரணம் குறித்து விக்ராந்த் மெஸ்ஸி தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், ``அகமதாபாத்தில் நடந்த கற்பனை செய்ய முடியாத துயரமான விமான விபத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்காக என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் மாமா கிளிஃபோர்ட் குந்தர் தனது மகன் கிளைவ் குந்தரை இழந்தார் என்பதை அறிந்து இன்னும் வேதனையாக இருக்கிறது.
அவர் அந்த துரதிர்ஷ்டவசமான விமானத்தை இயக்கிய அதிகாரி. கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், மாமாவிற்கும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பலம் அளிக்கட்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, ஷாருக்கான், அக்ஷய் குமார், ஆலியா பட், கங்கனா ரனாவத், கரீனா கபூர் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பல பாலிவுட் பிரபலங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

