Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது காதல் இருக்கும். சிலருக்கு ஒரு நபர்மீது, சிலருக்கு புத்தகங்கள் மீது, சிலருக்கு திரைப்படம் மீது, சிலருக்கு அவர்களுக்குரிய பொருள்கள் மீது என எல்லோருக்கும் எதோ ஒன்றின் மீது காதல் இருக்கும். ஆனால், பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் வாகனத்தின் மீது காதல் இருக்கும்.

குறிப்பாக இளைஞர்களுக்கு அவர்களின் பைக் மீது... பைக் என்பது வெறும் வாகனம் மட்டுமல்ல. அது ஒரு சுதந்திரத்தின், நானே என் பாதையை தேர்வு செய்கிறேன் என்ற உணர்வின் வெளிப்பாடு.

ராயல் என்ஃபீல்டு

முதல் முறையாக விரும்பிய ஒரு பைக்கை இயக்கிய அந்த தருணங்கள், வாழ்வின் மறக்கமுடியாத காதல் காட்சியாகவே பலருக்கும் விரியும். குறிப்பாக அந்த பைக் ராயல் என்ஃபீல்டு என்றால், அதன் ஆர்ப்பாட்டமும், துள்ளலும் வேறுவிதமாதத்தான் இருக்கும். அப்படி ஒருவர் ராயல் என்ஃபீல்டு பைக் மீது காதல் கொண்ட காட்சி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகியிருக்கிறது.

அந்த வீடியோவில் ஒரு பஞ்சாபி குடும்பம் இங்கிலாந்தில் குடியேற முடிவு செய்து, இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தன் வீட்டுப் பொருள்களை பேக் செய்திருக்கிறது. அந்தப் பொருள்கள் இங்கிலாந்தின் அவர்கள் வீட்டில் இறக்கப்படும் காட்சிதான் அந்த வீடியோ. ஒரு கண்டெய்னர் லாரியிலிருந்து பல பொருள்களுடன் ராயல் என் ஃபீல்டு பைக்கும் இருக்கிறது.

View this post on Instagram

A post shared by UB1UB2: Southall, West London (@ub1ub2)

அந்த பைக்கை இறக்கிய அந்த பைக்குரியவர், பைக்கில் அமர்ந்து அதை அனுபவிக்கும் காட்சி பலருக்கும் அவர்களின் பைக் மீது இருக்கும் காதலை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாக மாறியிருக்கிறது.

இது தொடர்பாக பைக்கின் உரிமையாளர் ராஜ்குரு, ``சுமார் £4,000 (₹4.6 லட்சம்) என் பைக்கை இங்கு கொண்டுவர செலவிட்டேன். 40 நாள் பயணத்திற்குப் பிறகு அனைத்தும் பாதுகாப்பாக வந்து சேர்ந்திருக்கிறது. எங்கள் வீட்டின் தளபாடங்கள் அனைத்தும் பஞ்சாபின் கர்தார்பூரில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கும் அந்த வீடியோ பைக் லவ்வர்களின் காதல் சாட்சியாக வலம் வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.