மிளிர் கல் : கண்ணகியின் வழித்தடத்தில் ஒரு பயணம் - அட்டகாச கதை 

பூம்புகார் தொடங்கி இடுக்கியில் அமைந்துள்ள மங்களா தேவி கண்ணகி கோயில் வரை கண்ணகியின் வழித்தடத்தில் ஒரு பயணம் சென்றால் எப்படி இருக்கும்? அந்தப் பயணம் தான் மிளிர் கல் நாவல்.

புறநானூறு காலம்


புறநானூறு உள்ளிட்ட தமிழிலக்கியங்கள், மிளிர் மணிகள் எனக் குறிப்பிடும் ஆபரணக் கற்களை மையமாகக் கொண்டு கண்ணகி வழித்தட பின்னணியில்  இரா. முருகவேள் எழுதிய நாவல் தான் மிளிர் கல். 


இந்த மிளிர் கற்களைக் கொண்டு சிலப்பதிகாரக் காலத்துக்கும் நவீன காலத்துக்கும் இடையே பாலம் ஏற்படுத்தியிருக்கிறார் முருகவேள். மிளிர் கற்களுக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் விரிக்கும் சதி வலைகளை அம்பலப்படுத்தும் பகுதிகள் நாவலின் பிற்பகுதியில் இடம்பெறுகின்றன. 

மிளிர்கள் நாவலை Audio Formatல் கேட்க

Vikatan Play

இடதுசாரி அரசியல் பின்னணி

அந்த வணிக நிறுவனங்களின் கண்ணசைப்பில், களப்பணியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் என காவல்துறையால் வேட்டையாடப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில் அரசியல் சார்ந்த, வெகுமக்கள் நலன் சார்ந்த அடிப்படையான கேள்விகளையும் நாவல் எழுப்புகிறது. 


வரலாற்று உணர்வையும் சமூக உணர்வையும் பின்னணியாகக் கொண்டு சமகாலப் பிரச்சினைகளின் வேர்களைத் தேடிப் பயணிக்கும் மிளிர் கல் இப்போது Audio வடிவத்தில் உங்கள் Vikatan Playல்.

மிளிர்கள் நாவலை Audio Formatல் கேட்க

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.