Kuberaa: ``இவர் நம் எல்லாரையும் வென்றுவிட்டார் - ராஷ்மிகாவை புகழ்ந்த நாகர்ஜுனா!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தன்னா, நாகர்ஜுனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படம் குபேரா.

ஜூன் 20-ம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் மூன்றாவது பாடலான பிப்பீப்பி டும்டும்டும் மும்பையில் வெளியானது. இதற்கான விழாவில் ராஷ்மிகா மந்தன்னாவை புகழ்ந்து பேசியுள்ளார் நடிகர் நாகர்ஜுனா.

Rashmika

செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தப் பெண் (ராஷ்மிகா) திறமையின் ஒரு சக்திமையம். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் நடித்த திரைப்படங்களைப் பாருங்கள்... எவ்வளவு சிறப்பாக இருக்கிறது!

நம் யாரிடமும் 2000-3000 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் இல்லை. இவர் நம் அனைவரையும் வென்றுவிட்டார்" எனக் கூறியுள்ளார் நாகர்ஜுனா.

சீதா ராமம், வாரிசு, அனிமல், புஷ்பா 2, சாவ்வா என இந்தியாவின் அனைத்து திரைத்துறைகளிலும் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார் ராஷ்மிகா மந்தன்னா என்பதைக் குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார் நாகர்ஜுனா.

Kuberaa

Kuberaa
Kuberaa

குபேரா’ திரைப்படம் லட்சியம், நன்நெறி மற்றும் அதிகார இயக்கவியல் ஆகிய கருப்பொருள்களை ஆராயும் ஒரு சமூக-டிராமாவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.