புதுக்கோட்டை கொலை வழக்கில் புதிய திருப்பம்; தூங்கிய மகனை அடித்துக் கொன்ற தந்தை; என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், மதுவுக்கு அடிமையாகி தினந்தோறும் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மதுபோதையில் மொட்டை மாடியில் தூங்குவதற்காகச் சென்றுள்ளார்.
காலை வெகுநேரமாகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த கணேசனின் மகன் மோகன் தாஸ் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்த போது அங்கு கணேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்திலிருந்தவர்களிடம் சொல்லியுள்ளார். இதனை அடுத்து அங்கு வந்த காவல் துறையினர் நேற்று சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கணேசனின் தந்தை கிருஷ்ணன் என்பவர் அதிகாலை 3 மணி அளவில், மது போதையில் மொட்டை மாடியில் படுத்திருந்த கணேசனை இரும்பு கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், அதிக ரத்தம் வெளியேறி கணேசன் உயிரிழந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

அதனால், சந்தேகம் மரணம் என்ற பதியப்பட்ட வழக்கைக் கொலை வழக்காக மாற்றியதோடு, கிருஷ்ணனை காரையூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுபோதையில் தினமும் வீட்டில் உள்ளவர்களிடம் பிரச்னை செய்த மகனைத் தந்தையே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம், சங்கம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


