அமெரிக்காவில் கைதான இன்ஸ்டா பிரபலம் Khaby Lame; விசா விதிமுறை மீறில் - அதிகாரிகள் சொல்வது என்ன?
கபே லேம் கைது
உலகளவில் சமூக ஊடகத்தின் மூலம் வைரலான கபே லேம் ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.
இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கைது குறித்து அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு விளக்கமளித்திருக்கிறது.
இது தொடர்பாக அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு ஜூன் 6-ம் தேதி நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் கபே லேம் (25) என்பவரைக் குடியேற்ற மீறல்களுக்காகக் கைது செய்தது.
ஏப்ரல் 30-ம் தேதி அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், தனது விசாவின் விதிமுறைகளை மீறி அதிக நாள்கள் தங்கியிருந்தார்.
ஜூன் 6-ம் தேதி கபே லேமு கைது செய்யப்பட்டார். அன்றே தன்னார்வ வெளியேற்றம் வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டார்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
யார் இந்த காபி லேம்?
ஆப்ரிக்காவின் செனகலில் பிறந்த கபே லேம், கொரோனாவின் போது டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வார்த்தைகளற்ற, கிண்டலான வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றார்.
டிக்டாக்கில் 162 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 80 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும் அவரை ஃபால்லோ செய்கின்றனர்.
வைரலான லைஃப் ஹேக் எனக் கூறப்படும் வீடியோக்களை சில செய்கைகள் மூலம் கிண்டல் செய்து வீடியோ பதிவிடும் இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவரின் ஒவ்வொரு வீடியோவும் பல மில்லியன் வியூஸ் போகும். இவர் கைது செய்யப்பட்ட விவகாரம் சமூக ஊடகத்தில் வைரலானது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


