Lokah: சூப்பர் ஹீரோயின் ஆக களமிறங்கும் கல்யாணி பிரியதர்ஷன் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்

இந்திய திரைப்படங்களில் பெரும்பாலும் சூப்பர் ஹீரோ கதைப் படங்கள் குறைவாகவே வெளியானாலும் அதில் எல்லாமே ஆண்கள் தான் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கின்றனர்.

பெண்கள் சூப்பர் ஹீரோ ஜானரில் பெரிதாக நடித்ததில்லை. முதல் முறையாக கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோ கதாபத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 

கல்யாணி பிரியதர்ஷன்

லோகா சாப்டர் 1; சந்திரா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தை துல்கர் சல்மான் தயாரிக்கிறார்.  டோமினிக் அருண் இயக்கி இருக்கிறார். இப்படம் பல பாகங்களில் ஒரு சினிமாடிக் யூனிவர்ஸில் உருவாக இருக்கிறது.

பிரேமலு புகழ் நஸ்லேன், சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியார் இப்படத்தில் நடிக்கின்றனர்.

View this post on Instagram

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டிருக்கின்றனர். சூப்பர் ஹீரோ ஆடையுடன் காட்சியளிக்கும்  கல்யாணி பிரியதர்ஷனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.