இளம்பெண் பாலியல் புகார்... புதுச்சேரிக்கு தப்பிஓடிய ஆம்பூர் அர்ச்சகர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஒரு திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், தியாகராஜன் மீது திருமணமாகாத 28 வயது இளம்பெண் சமீபத்தில், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ``தியாகராஜன் அர்ச்சகராக உள்ள கோயிலில் நான் கடந்த ஓராண்டாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் உழவாரப் பணி செய்துவந்தேன். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வலுகட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட்டார்.

இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் மிரட்டல் விடுத்து ஏமாற்றிவருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

அர்ச்சகர் தியாகராஜன்

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸாருக்கு எஸ்.பி ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டார். அதன்படி, அர்ச்சகர் தியாகராஜன் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கைக்குப் பயந்து அர்ச்சகர் தியாகராஜன் தலைமறைவானார்.

போலீஸார் அவரை தேடிவந்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த அர்ச்சகர் தியாகராஜன் இன்று காலை கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரை ஆம்பூருக்கு அழைத்துவந்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.