NO Alcohol; காபி குடிக்க டிஜே, பார்ட்டி - யூத் ட்ரெண்டில் `காபி ரேவ்’... சென்னையிலும் இருக்கா?

சூரியன் உதிக்கும் போது பார்ட்டி... பார்டி என்றவுடன் காலையிலேயே மதுவா? என்று நினைக்கலாம். ஆனால் இது காபி பார்ட்டி... டிஜே சத்தத்துடன், நடனம் ஆடிக்கொண்டே பருகும் காபி. இதனை `காபி ரேவ்’ என்று அழைக்கின்றனர்.

இது மது இல்லாத நிகழ்வாக இருப்பதால் டீனேஜர்கள் மற்றும் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் என யார் வேண்டுமானாலும், இதில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வுகள் பகல் நேரங்களிலும் நடக்கிறது. இரவு நேர கிளப் அனுபவத்தை போல இல்லாமல், காபி கடையில் ஒரு பார்ட்டி போல இருக்கும்.

காபி ஷாப்கள் நடத்தும் இந்த நிகழ்வுகளில் டிஜேக்கள் ஆஃப்ரோ ஹவுஸ், ஃபுல் ஹவுஸ் போன்ற பாணியில் இசை வாசிப்பார்களாம்.

இந்த புதிய ட்ரெண்ட் மும்பை, டெல்லி, சூரத், இந்தூர், லக்னோ, சென்னை என இந்தியாவின் முக்கிய இடங்களில் பரவி வருகிறது.

கஃபேக்களில் டிஜேகள் வைத்து வெள்ளையர்கள் நடனமாடுவதை பார்த்திருப்போம். லண்டனின் பேக்கரி முதல் ஆம்ஸ்டர்டாமின் திறந்தவெளி கிட்சன் வரை இந்த ட்ரெண்ட் இருந்து வருகிறது. தற்போது இந்த நிகழ்வு நியூயார்க் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது.

இந்தியாவின் முக்கிய இடங்களான சென்னை, மும்பை, டெல்லி, சூரத், இந்தூர், லக்னோ, ஹைதராபாத், நாக்பூர் போன்ற இடங்களில் இந்த புதிய கலாசாரம் உருவெடுத்துள்ளது.

காபி கடைகள் டிஜே சத்தத்துடன் பார்ட்டி ஹாட்ஸ்பாட் ஆக மாறும் புதிய போக்கை இளைஞர்கள் விரும்புகின்றனர். இசை ஆர்வலர்களும் மது இருக்கும் கிளப்பை தவிர்த்து இந்த காபி நிறைந்த ஆல்கஹால் இல்லாத சூழலுக்காக வருகை தருகின்றனர் என்கிறார்கள்.

சென்னையில் கஃபே மனானா, சமீபத்தில் காபி ரேவ் நிகழ்வுகளை நடத்தியது. கஃபே நோசி மற்றும் ஹார்ட் ராக் கஃபே போன்ற பிற இடங்களும் இந்த ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளன. இது காபி பிரியர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த புதிய ட்ரெண்ட் இந்தியாவின் நகரப்புற இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.