Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார் - முன்னாள் காதலன் பேசியதென்ன?

தீபிகா படுகோனே 2000-களில் மும்பைக்கு வந்துள்ளார். மாடலிங் துறையில் வெற்றிகரமாக இயங்கிய அவர், பின்னர் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

அந்த காலத்தில் தீபிகா மற்றும் முசமில் இப்ராஹிம் காதலித்துள்ளனர். முசமிலும் அப்போது மாடலிங் துறையில் வாய்ப்புகள் தேடிக்கொண்டிருந்தார்.

சமீபத்தில் பாட்காஸ்டர் சித்தார்த் கண்ணன் உடனான உரையாடலில் முசாமில் தீபிகா உடனான 2 ஆண்டு டேட்டிங் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

Muzamil Ibrahim

தீபிகாதான் தன்னை வெளியில் அழைத்ததாகவும், அப்போது கையில் அதிக பணம் இல்லாததால் ரிக்‌ஷாவில் வெளியில் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

நான் Deepika Padukone -ன் மிகப் பெரிய ரசிகன்

"நாங்கள் இரண்டு ஆண்டுகள் காதலித்தோம். தீபிகா மிகவும் உறுதியாக இருந்தார். ஏனென்றால் அவர் இறகுப்பந்து வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள், அவரை எல்லோருக்கும் தெரியும்." எனக் கூறியுள்ளார் இப்ராஹிம்.

Deepika Padukone
Deepika Padukone

மேலும் தீபிகாவின் வளர்ச்சி பற்றி பேசிய அவர், "அப்போது நான் ஸ்டாராக இருந்தேன். அவர் சாதாரணமாக இருந்தார். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராகிவிட்டார். என்னை யாருக்கும் தெரிவதில்லை. நான் அவரது பெரிய ரசிகன். அவரது படங்களை விரும்பி பார்க்கிறேன். மிகவும் சிறப்பாக இருக்கிறார், அவரது திருமணத்துக்கு முன்பு வரை நாங்கள் அவ்வப்போது பேசிக்கொள்வதுண்டு." எனக் கூறியுள்ளார்.

`பணம் இல்லாமலும் மகிழ்ச்சியாக இருந்தோம்

அதிக பணம் இல்லாத நாள்களில் டேட்டிங் சென்றது குறித்து, "அப்போது சிறுவர்களாக இருந்தோம். மழையில் ரிக்‌ஷாவில் டேட்டிங். அது க்யூட்டாக இருக்கும். நான் அப்போது அவரை விட அதிகம் சம்பாதித்து வந்தேன். நான் கார் வாங்கியபோது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அதன் பிறகு நான் ரிஷாவில் டேட்டிங் சென்றதே இல்லை என்பதால் அந்த நினைவுகள் மிகவும் புத்துணர்வாக இருக்கின்றன. பணம் இல்லாமலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்." எனப் பேசியுள்ளார்.

மேலும், அவரே தீபிகாவை பிரேக் அப் செய்ததாகவும் கூறியுள்ளார் மாடலிங்கில் இருந்து, இப்போது நடிகராக வளர்ந்துள்ள முசமில் இப்ராஹிம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.