சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேரத்தில் சம்பளம் கொடுப்பது கிடையாது என்ற புகார் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து இழுத்தடித்து கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரு மாத சம்பளத்தை கொடுக்காமல் மொகத்தை இயக்குநர் மணீஷ் வேலையில் இருந்து நீக்கிவிட்டார். சம்பவத்தன்று சம்பள பாக்கியை வாங்குவதற்காக மொகமத் இயக்குனரின் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சம்பள பாக்கியை கொடுக்கும்படி கேட்டதற்கு மீண்டும் வேலையில் சேர்ந்தால்தான் சம்பளத்தை கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறை

இதனால் வேறு வழியில்லாமல் மொகமத் மீண்டும் வேலையில் சேர்ந்துள்ளார். அப்படி இருந்தும் மணீஷ் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். சம்பவத்தன்று மணீஷ் அலுவலகத்தில் இருந்தபோது மொகமத் தனது பாக்கி சம்பளத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் மணீஷ் டிரைவரை கண்டபடி திட்டியுள்ளார். அதோடு சம்பளத்தை கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் டிரைவர் மொகமத் இயக்குநரை எதிர்த்து பேசியிருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த சமையல் அறையில் கிடந்த கத்தியை எடுத்து மொகமத்தை மணீஷ் குத்திவிட்டார்.

உடனே மொகமத் ரத்தம் சொட்ட சொட்ட அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்தார். அதனை பார்த்த அக்கட்டட வாட்ச்மென் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதோடு அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை இயக்குநர் கைது செய்யப்படவில்லை.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.