Thug Life: டிரெண்டிங்கில் இருக்கும் ”முத்த மழை” பாடலை பாடிய மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் மகள்!
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
’நாயகன்’ படத்திற்கு பிறகு கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்திருப்பது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதன்படி நாளை ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை படக்குழு செய்து வருகிறது.
இந்த நிலையில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் மகள் சாரா, தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் பகிர்ந்து கொண்டார்.
இந்த வீடியோவில் ஜோஜு ஜார்ஜ் காரில் சென்று கொண்டிருக்கும் போதே அவரின் மகளும், அவரும் இணைந்து முத்தமழை பாடலை பாடுகின்றனர். வீடியோவின் இறுதியில் தக் லைஃப் திரைப்படம் நாளை வெளியாவது குறித்தும் ஜோஜு ஜார்ஜ் குறிப்பிடுகிறார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramA post shared by JOJU (@jojugeorgeactorofficial)
மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜுக்கு தமிழில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளியான ”பனி” என்ற படத்தில் மூலம் இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன்பு “தக் லைஃப்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் பலரையும் மெய் மறக்க வைத்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


