Thug Life: ``கடினமாக உழைச்சிருக்கோம்; எல்லாரும் படத்தை என்ஜாய் பண்ணுங்க - நடிகர் சிம்பு
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப்
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 4)தக் லைஃப் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகின்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய சிம்பு, "நாளை தக் லைஃப் படம் வெளியாகிறது. தன்னபிக்கையுடன் இருக்கிறோம். இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஏனென்றால் மிகப்பெரிய உழைப்புக் கொடுத்திருக்கிறோம். கமல் சார் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். எல்லாருமே கஷ்டப்பட்டு வேலை செய்திருக்கிறார்கள். எல்லாரும் படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


