சிதம்பரம்: மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டிய அண்ணாமலை பல்கலை. பேராசிரியர் கைது
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் 27 வயதுடைய மாணவி ஒருவர், 2018-ல் முதுநிலை வேளாண்மை படித்து வந்தார்.
அப்போது அதே துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த 55 வயதுடைய ராஜா, அந்த மாணவியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
அப்போது அதைத் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்த உதவிப் பேராசிரியர் ராஜா, அதைக் காட்டி மாணவியை மிரட்டி பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார்.
அந்த வீடியோவை வெளியில் விட்டுவிடுவேன் என்று ராஜா மிரட்டியதால், பயந்துபோன மாணவி வேறு வழியின்றி பேராசிரியர் ராஜா அழைக்கும் இடத்திற்கெல்லாம் சென்றிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பயந்துபோன மாணவி, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகாரளித்திருக்கிறார். அதையடுத்து அந்த புகாரின் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார் எஸ்.பி ஜெயக்குமார்.
விசாரணையில் மாணவி அளித்த புகார் உண்மை என்று தெரிய வரவே, உதவிப் பேராசிரியர் ராஜாவைக் கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி ஜெயக்குமார். அதனடிப்படையில் சிதம்பரம் சாரதாராம் நகரைச் சேர்ந்த ராஜாவை, அண்ணாமலை நகர் போலீஸார் கைது செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


