PM Vidyalaxmi: 10 லட்சம் வரை பிணையில்லாத கல்விக்கடன்; மத்திய அரசின் திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் உயர்கல்விக்காகக் கல்லூரிகளில் விண்ணப்பிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதில் பெரும்பாலானோருக்குக் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்துவது சவாலாக இருக்கிறது.

எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி படிக்க அரசு சில நிதி உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது.

வித்யா லஷ்சுமி கல்விக் கடன் திட்டம்

அதில் ஒன்றுதான் பிரதமரின் வித்யா லஷ்சுமி கல்விக் கடன் திட்டம். தரமான அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் (Quality Higher Education Institutions - QHEIs) சேர்ந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் திட்டமே இந்த வித்யா லஷ்சுமி கல்விக் கடன் திட்டம்.

வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த மாணவர்களுக்குப் பிணையம் இல்லாத, உத்தரவாதம் இல்லாத கடனை அளிக்கும். இந்தத் திட்டம் மூலம் 2031-க்குள் ரூ.3,600 கோடி மதிப்பில் பணையம் இல்லாத கல்விக் கடன்களை வழங்க அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.

வேறு எந்தத் திட்டத்தின் மூலமும் உதவித்தொகை பெறாத மாணவர்கள் மட்டும், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன் பெறலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் உள்ள மாணவர்கள் ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் பெறலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கும் கடனுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும். கல்விக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும். வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைப் பொறுத்து உங்களுக்கு ஏற்ற வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம்.

வித்யா லஷ்சுமி கல்விக் கடன் திட்டம்
வித்யா லஷ்சுமி கல்விக் கடன் திட்டம்

இந்தத் திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. எனவே, கல்விக் கடன் வாங்க விரும்புவோர் இந்தத் திட்டத்தில் பயன்பெற முயற்சி செய்யலாம்.

இந்தக் கல்விக்கடனைப் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில், லாக்இன் செய்து பதிவு செய்தபின், விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்து, ஒவ்வொரு மாணவரின் கல்வித் தகுதி மற்றும் கடன் தேவைக்கு ஏற்ப விண்ணப்பித்து கல்விக் கடனைப் பெற்றுக்கொள்ளலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.