Reborn doll: குழந்தையைப் போலத் தத்ரூபமாக இருக்கும் பொம்மைகள்; சர்ச்சையைக் கிளப்பக் காரணம் என்ன?

வழக்கமான பொம்மைகள் போன்று இல்லாமல் இந்த ரீபான் (Reborn) பொம்மைகள், தத்ரூபமாக உண்மையான குழந்தைகளைப் போன்று உள்ளன.

இதனை மக்கள் ஆர்வமுடன் கையில் வைத்து மகிழ்கின்றனர். சமீபத்தில் கூட இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி காண்பவரே நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

இது போன்ற பொம்மைகளைக் கலைஞர்கள் நுணுக்கமாகக் கையினால் செய்வதாகக் கூறுகின்றனர். இந்தப் பொம்மைகளை முதலில் பார்த்தால் உயிரோட்டம் உள்ள ஒரு குழந்தை போன்று தோன்றுகிறது.

Reborn doll

பார்ப்பதற்குக் கவரும் வகையிலும், உணர்ச்சிகரமான வகையிலும் இந்தப் பொம்மைகள் இருப்பதால் மக்கள் இதனை ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

ரியோ டி ஜெனிரோ நகர சபை (the rio de janeiro city council), இந்த ரீபான் பொம்மைகளை உருவாக்கும் திறமையான கலைஞர்களைக் கௌரவிக்க மசோதா நிறைவேற்றியுள்ளதாக நியூஸ் 18 வலைத்தளத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சட்டம் இப்போது நகர மேயரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஒரு பெண் இந்த ரீபான் பொம்மையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, பிரேசிலின் பிற பகுதிகளில் இந்தப் பொம்மைகளுக்கு மருத்துவ உதவி கோரும் நபர்களுக்கு அபராதம் விதிக்க பரிசீலித்து வருகின்றனர்.

Brazils life-like doll craze goes viral as online videos spark political reaction. pic.twitter.com/6a3GFL9ZRk

— The Associated Press (@AP) May 29, 2025

இந்த ரீபான் பொம்மைகள் மனிதர்களின் உணர்ச்சிகளிலும் |சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அந்நாடு முழுவதும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

சிலிக்கான் கொண்டு செய்யப்பட்ட இந்தப் பொம்மைகள் பெரும்பாலும் செவிலியர்கள் மற்றும் பெற்றோருக்குரிய பயிற்சிக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. சிலர் இதன் உண்மைத்தன்மைக்காக வாங்கி மகிழ்ச்சி அடைகின்றனர்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் வீடியோ வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் பலரும் இது போன்ற பொம்மைகளைக் கையில் வைத்திருக்கின்றனர். அந்த வீடியோ இடம்பெறும் ஒருவர் கூறுகையில், ”இந்தப் பொம்மையை என்னுடன் மால் போன்ற பொதுவெளியில் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.