Kubera: எனக்கு மொழி முக்கியமில்லை, எந்த...- ‘குபேரா’ பட நிகழ்வில் ராஷ்மிகா பேசியது என்ன?

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருகிறார். மேலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜுன்1) நடைபெற்று வருகிறது.

ராஷ்மிகா

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ராஷ்மிகா மந்தனா , " தமிழில் நல்ல கதைகள் வந்தால் ஓடோடி வந்துவிடுவேன். எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மொழி வித்தியாசம் கிடையாது. அதுபோல, பேன் இந்தியா, ரீஜினல் என வித்தியாசம் பார்க்கமாட்டேன். நல்ல கதைகள் வந்தால் நடிப்பேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.