கன்னித்தன்மையுள்ள மனைவியை எதிர்பார்க்காதீர் - வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார்.

பாலிவுட்டைத் தொடர்ந்து இப்போது அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

அங்கு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா, இப்போது இந்தியப் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

Priyanka Chopra Jonas

பிரியங்கா சோப்ரா இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி இருக்கிறது.

பிரியங்கா சோப்ரா அளித்திருந்த பேட்டியில், கன்னித்தன்மையுள்ள பெண் மனைவியாக வரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஒரு நாள் இரவில் முடியக்கூடியது.

எனவே நல்ல குணம், நல்ல பழக்க வழக்கம் உள்ள பெண்ணைப் பாருங்கள். நல்ல குணம் நிரந்தரமாக இருக்கக்கூடியது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இப்பேட்டி சமூக வலைத்தளத்தில் இப்போது வைரலானதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில், நீங்களும் நல்ல வருவாய், பணம் இருக்கும் நபரை எதிர்பார்க்கக் கூடாது. அவரின் நல்ல குணங்கள் மற்றும் நல்ல தோற்றத்தை மட்டும் பார்க்கவேண்டும்.

Priyanka Chopra
Priyanka Chopra

பணம் ஒருநாள் அழிந்துவிடும். ஆனால் குணநலன்கள் வாழ்நாள் முழுவதும் அழியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் கருத்துக்குச் சிலர் பாராட்டும், சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.