பெண்களுக்கும் தாம்பத்திய ஆசை குறைவாக இருக்கலாம்.. என்ன காரணம்?

ஆண்கள் போலவே, சில பெண்களுக்கும் தாம்பத்திய ஆசை குறைவாக இருக்கலாம். மருத்துவ ரீதியில் இது ‘பிரிஜிடிட்டி’ எனப்படுகிறது. இதற்கான முக்கியக் காரணம், மூளை மற்றும் யோனியின் இடையிலான நரம்பியல் தொடர்பு பாதிப்படைவதுதான்.

 

மாதவிடாய்க்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால், ஆசை, ரத்த ஓட்டம் மற்றும் ஈரப்பதம் குறைகிறது. பிரசவத்துக்குப் பிறகு அல்லது தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு, விருப்பம் குறையக்கூடும்.

 

மன அழுத்தம், கவலை, உறவுத் தகராறு போன்ற உளவியல் சிக்கல்கள் கூட அதிக பாதிப்பு ஏற்படுத்தும். இதய நோய், நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு, சில மருந்துகள், டிஸ்பெரூனியா போன்ற உடல் நிலைகள் கூட ஆசையைக் குறைக்கும்.

 

தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வால் பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்பாமலும், ஈரப்பதம் இல்லாமலும் இருக்கலாம். இதற்குத் தீர்வாக உடற்பயிற்சி, யோகா, ஹெகல் பயிற்சி, மன சாந்தி அளிக்கும் செயல்கள் உதவக்கூடும். வாழ்கைத் துணையுடன் வெளிப்படையாக உரையாடுவது அவசியம்.

 

உணவில் முந்திரி, பாதாம், அவகோடா, முட்டை, மீன், பசலைக்கீரை, பூண்டு, முருங்கைக்காய் போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. இயற்கை மென்மையான எண்ணெய்கள், சோற்றுக் கற்றாழை ஜெல் போன்றவற்றும் பயன்படலாம். சித்த மருத்துவத்தில் சதாவரி, குமரி லேகியம் ஆகியவை பயனுள்ளதாக கருதப்படுகின்றன.


Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.