`இந்திய ராணுவத்தில் இன்ஜினீயரிங் பயிற்சி; பின்னர் வேலை! - விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ராணுவம் இன்ஜினீயரிங் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியீடு.

என்ன பயிற்சி?

டெக்னிக்கல் பணிகளுக்கான இன்ஜினீயரிங் பயிற்சி.

மொத்த காலி பணியிடங்கள்: 90

குறிப்பு: திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு: 16 1/2 - 19 1/2

உதவித்தொகை: மூன்று ஆண்டுக்கால பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ.56,100 வழங்கப்படும்.

கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றைக் கொண்ட பிரிவில் படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். JEE (Mains) தேர்விலும் கலந்துகொண்டிருக்க வேண்டும்.

இந்திய ராணுவம்

எத்தனை ஆண்டு பயிற்சி?

4 ஆண்டுகள்.

என்ன டிகிரி வழங்கப்படும்?

இன்ஜினீயரிங் டிகிரி.

பயிற்சிக்குப் பிறகு என்ன வேலை?

லெப்டினன்ட். இந்த வேலை கட்டாயம் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பயிற்சியில் தேர்ச்சி பெற்று வேலை கிடைத்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.17 - 18 லட்சம் சம்பளம்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட்-லிஸ்டிங், நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.joinindianarmy.nic.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 12, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.