பூமியின் மையத்திலிருந்து பொங்கி வழியும் தங்கம்; புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

பூமியின் மையத்திலிருந்து தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் மேற்பரப்புக்கு கசிந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹவாய் எரிமலை பாறைகள் பற்றிய ஒரு புதிய ஆய்வில் தங்கம் கசிந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் ஜெர்மனியில் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஹவாய் எரிமலைப் பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் ஹவாய் எரிமலைப் பாறைகளில் இருந்து பூமியின் மையத்திலிருந்து தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள், மேற்பரப்பின் வழியே கசிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் 99.99% க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் ருத்தேனியம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் 3,000 கி.மீ பாறைக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன என்று சயின்ஸ் அலர்ட் தெரிவித்துள்ளது.

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரகம் உருவானதிலிருந்து இந்த மதிப்புமிக்க வளங்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி குறித்து நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

”முதல் முடிவுகள் வந்தபோது, ​​நாங்கள் தங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பதை உணர்ந்தோம்! தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் உட்பட மையத்திலிருந்து வரும் பொருட்கள் பூமியின் மேற்பரப்பில் கசிந்து வருவதை எங்கள் தரவு உறுதிப்படுத்தியது," என்கிறார் ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தின் புவி வேதியியலாளர் நில்ஸ் மெஸ்லிங்.

உலகின் தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகப் பொருட்கள் பூமியின் மையத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதையும் ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கண்டுபிடிப்புகள், பரிணாம வளர்ச்சியில் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தை உருவாக்கின்றன" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.