Chennais Amirta: விமானக் கல்லூரியில் மாணவர்களுக்காக நடைபெற்ற FASHIONISTA -2025 பிரத்யேக பேஷன் ஷோ

சென்னைஸ் அமிர்தா விமானக் கல்லூரியில் மாணவர்களுக்காக FASHIONISTA -2025 பிரத்தியேக பேஷன் ஷோ CABIN CREW உடை அலங்காரத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஊடகத்துறை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் CELEBRITY திரு அனிதா சம்பத் மற்றும்  பேஷன் ஷோ சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.

chennais amirta group of instution

சிறப்பு விருந்தினராக வருகை தந்து திரு அனிதா சம்பத் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்பாக சென்னைஸ் அமிர்தா விமான கல்லூரி வளாகத்தை சுற்றி பார்த்தார்.
இதில் Airport check in counter, model Aircraft, மாதிரி விமான நிலையம் (Airport) போன்ற அதிநவீன வசதிகளுடன் கூடிய செயல்முறை சார்ந்த கல்வியை சென்னைஸ் அமிர்தா கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு அளிப்பது குறித்து பாராட்டி பேசினார்.

இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றும் வகையில் கேபின் க்ரூ (cabin crew) யூனிபார்ம் அணிந்த மாணவர்கள் மாடல் விமானத்திலிருந்து வெளியே வந்து ராம்பில் (Ramp walk) நடை போட்டு போட்டி நடுவர்கள் மற்றும்  பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். இவர்களின் கேபின் க்ரூ ( cabin crew) தோற்றமும் நடையும்  நடுவர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்றது.

chennais amirta group of instution
chennais amirta group of instution

சிறப்பு விருந்தினர் ஊடகத்துறை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்  Celebrity திரு அனிதா சம்பத்  அவர்களுடன் கூடுதலாக பேஷன் துறையில் சாதித்த இரண்டு பிரபலங்கள் நடுவர்களாக கலந்து கொண்டனர்.
 சர்வதேச மாடல் மற்றும் பல்வேறு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களான திரு தாமஸ் ராஜ் மற்றும் திரு அம்ருதா அவர்கள் நடுவர்களாக கலந்து கொண்டனர்.

திரு அனிதா சம்பத் அவர்கள் நடுவர் குழுவுடன் இணைந்து சிறப்பாக பேஷன்  வாக் (fashion walk) செய்த அணியை தேர்வு செய்து பாராட்டுகளுடன் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். மேலும் இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் நடுவர்களால் வழங்கப்பட்டது.

Cabin crew உடையுடன் மாணவர்கள் Ramp-ல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தங்களை வெளிப்படுத்தினர். அவர்களது நடையும் உடையும் மிகவும் சிறப்பாக இருந்தது என்று திரு அனிதா சம்பத் அவர்கள் தெரிவித்தார்.

இந்த பேஷன் ஷோ மாணவர்களின் திறமையையும் தன்னம்பிக்கையும் வெளிப்படுத்தும் மேடையாக சென்னைஸ் அமிர்தா விமானக் கல்லூரி நிர்வாகத்தால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.