Hyderabad: ஆண் ஸ்பான்ஸ்கரளுக்காக எங்களை... உலக அழகிப் போட்டியில் இருந்து விலகிய மில்லா - ஏன்?
இந்த ஆண்டு உலக அழகிப் போட்டி தெலங்கானாவில் நடந்து வருகிறது. இதன் இறுதி சுற்று வரும் சனிக்கிழமை (மே 31-ம் தேதி) நடக்க உள்ளது.
இந்தப் போட்டியில் இருந்து கடந்த 16-ம் தேதி இங்கிலாந்தை சேர்ந்த மில்லா மாகி விலகினார். இவர் 2024-ம் ஆண்டிற்கான மிஸ் இங்கிலாந்து பட்டத்தை வென்றவர் ஆவார்.
ஹைதராபாத்தில் நடக்கும் உலக அழகிப் போட்டியில் இவர் இங்கிலாந்து சார்பாக போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், திடீரென்று இவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், இவருக்கு பதிலாக இங்கிலாந்தில் இருந்து வேறொருவர் இந்தப் போட்டியில் களமிறங்கினார்.
விலகியது ஏன்?
இந்த நிலையில், உலக அழகிப் போட்டியில் இருந்து விலகியது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மில்லா.
"ஒவ்வொரு விருந்தினர்கள் (ஸ்பான்ஸர்கள்) மேஜைகளிலும் இரண்டு பெண்கள் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரு நாள் மாலை முழுவதும் அவர்கள் அருகில் அமர்ந்து, அவர்களை நாங்கள் மகிழ்விக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதை என்னால் நம்பவே முடியவில்லை.
நான் அங்கே அவர்களை மகிழ்விக்க செல்லவில்லை. உலக அழகிப் போட்டி ஒரு சில மதிப்புகளை கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், அது இன்னமும் அந்தக் காலத்திலேயே நிற்கிறது. அவர்கள் என்னை பாலியல் தொழிலாளிப் போல உணர வைத்தார்கள்.
சங்கடத்தில் ஆழ்த்தினர்
ஒரு கட்டத்தில், நான் எதற்காக அந்தப் போட்டிக்கு சென்றேனோ, அதுகுறித்து அந்த ஆண்களிடம் பேச முயற்சி செய்தேன். ஆனால், அதைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை. அதற்கு பதிலாக, அவர்களின் மோசமான பேச்சுகள் மூலம் என்னை சங்கடத்தில் ஆழ்த்தினர்.
நான் அங்கே மாற்றத்தை உருவாக்க சென்றேன். ஒரு புதிய எதிர்காலத்தையும், இளைஞர்களை ஊக்குவிக்கவும் அங்கே சென்றேன். ஆனால், அங்கே நான் அங்கே மகிழ்ச்சிப்படுத்தும் குரங்கைப் போல உட்கார வைக்கப்பட்டேன். அதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. அரசாங்கத்திற்கு உதவும் பணக்கார ஆண்களை மகிழ்விக்க நாங்கள் போட்டிக்கு செல்வதில்லை" என்றிருக்கிறார் காட்டமாக.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்வது என்ன?
மில்லாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக அழகிப் போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
"இந்த மாதத்தின் தொடக்கத்தில், தனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி போட்டியில் இருந்து விலகுவதாக மில்லா மாகி கோரிக்கை வைத்தார். ஒரு அம்மாவாகவும், பாட்டியாகவும், உலக அழகிப் போட்டியின் தலைவர் ஜூலியா மோர்லி CBE மில்லா விலக சம்மதித்தார். அவர் உடனடியாக இங்கிலாந்து திரும்ப ஏற்பாடு செய்தார்.
ஜூலியோ மில்லா கூறியது பொய்” என்று மில்லாவின் கருத்தை மறுத்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


