கும்பகோணம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான 4 பேரின் விவரங்களை மறைக்கிறதா போலீஸ்?

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

அதே கடையில் குடவாசல் மேட்டு தெருவைச் சேர்ந்த சண்முக பிரபு (29), கும்பகோணம் பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (40), பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (40) ஆகியோர் வேலை செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பணி முடித்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார் அப்பெண். அப்போது மூன்று பேரும் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த பெண்ணின் வாயைப் பொத்தி கரிக்குளம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

சீனிவாசநல்லூரைச் சேர்ந்த சரவணன்(48) அந்த வீட்டின் வாட்ச்மேன். இவரும் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

பின்னர், நான்கு பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அழுது கொண்டே வீட்டுக்குச் சென்ற பெண், தனக்கு நடந்த கொடுமையைத் தன் தம்பியிடம் சொல்லிக் கதறியிருக்கிறார்.

பின்னர் ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை நான்கு பேர் கூட்டுப் பாலியல் கொடுமை செய்து விட்டதாகவும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸ், சண்முக பிரபு, பாஸ்கர், பிரகதீஸ்வரன், சரவணன், ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சம்பவம் நடந்து சில தினங்கள் ஆன நிலையில், தேவையில்லாத நெருக்கடி ஏற்படும் என்பதால் ஆடுதுறை போலீஸார் இந்த விவகாரத்தை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டனர்.

அதையும் மீறி இந்த தகவல் வெளியே கசிந்து விட்டது. மேலும் குற்றவாளிகளின் போட்டோ உள்ளிட்ட எந்த விவரமும் தெரியாமல் பாதுகாத்துள்ளனர்.

இதையடுத்து யாரையோ காப்பதற்காக போலீஸார் மூடி மறைக்க முயற்சி செய்வதாகப் புகார் கிளம்பியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.