கரூர்: கம்பி வேலியைத் தொட்ட ஆசிரியை மின்சாரம் தாக்கி பலி; உறவினர்கள் போராட்டம்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மகாதானபுரம் தீர்த்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி மனைவி சரஸ்வதி (வயது: 55).

இவர், மாயனூரில் உள்ள டான்செம் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், தனது வீட்டின் முன்பு சுத்தம் செய்த போது அருகில் இருந்த தனியார் டவர் வேலியின் இரும்பு கம்பியைத் தொட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

அவரது உறவினர்கள் அவரைக் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து, அவரது உடலை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காகச் சவக்கிடங்கில் வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், டவரை மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் உரிய இழப்பீடு வழங்கக் கோரியதோடு, தனியார் டவர் அதிகாரிகள் இங்கு வரும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி, மகாதானபுரம் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கிலும், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திருச்சி கரூர் சர்வீஸ் சாலை முன்பும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்ற போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

dead

தனியார் டவர் அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொள்வதாகக் கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, மகாதானபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்ததையடுத்து அங்கும் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்தனர்.

தனியார்ப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனியார் டவர் மின்வேலியைத் தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.