ரோஹித், கோலி ஓய்வை நினைச்சு பயப்படாதீங்க, நம்ம இந்திய அணி...- சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்வது என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “ரோஹித், கோலி அடுத்தடுத்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றதை நினைத்து ரசிகர்கள் பயப்பட வேண்டாம்.
டிராவிட், டெண்டுல்கர், லக்ஷ்மணன் ஆகியோர் ஒரே நேரத்தில் ஓய்வுப் பெற்றபோதும் பதற்றம் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே நம்பர் 1 அணியாக இந்தியா உருவெடுத்தது. ரோஹித், கோலி இடங்களை நிரப்ப சிறிது காலம் ஆகும்.
ஆனாலும் இந்திய அணி தனது சிறந்த நிலையிலேயே தொடரும். இந்தியாவில் கிரிக்கெட் ரொம்பவே பிரபலமாக இருக்கிறது. இங்கு கிரிக்கெட் வலுவாக உள்ளது.
இந்திய அணிக்காக விளையாட திறமையான, ஆயிரக்கணக்கான இளம் வீரர்கள், போதுமான அளவுக்கு காத்திருக்கின்றனர்.

இதுபோன்ற இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வரும் வீரர்கள், திறமையானவர்களாக இருக்க வேண்டும். இதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும். இதற்காக பயப்பட வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


