Pakistan: சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பாகிஸ்தான் கோரிக்கை
சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி பாகிஸ்தான் கடிதம் எழுதியிருப்பதாக என்.டி.டி.வி தளம் தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் நீர் மேலாண்மை அமைச்சகம் இந்திய அரசுக்குச் சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் கோரியுள்ளதாக அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது கடந்த 60 ஆண்டுகளாகப் பாகிஸ்தானுக்கு நீரைப் பகிர்ந்தளிக்க நடைமுறையில் இருந்துவருவதாகும்.
பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி உத்தரவிட்டது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கான ஆதரவை முழுவதுமாக கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.
பாதிக்கப்படும் பாகிஸ்தான் மக்கள்
உலக வங்கி மத்தியஸ்தம் செய்த ஒரு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்துவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே சிந்து நீர் நிறுத்தப்படுவது பாகிஸ்தான் மக்களுக்குப் பெரும் நீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என அந்த நாட்டு அரசு கூறியிருந்த நிலையில், இந்திய அரசுக்கு எழுதிய கடிதத்திலும் அதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
20 கோடிக்கும் மேலான மக்கள் சிந்து நதியை நம்பியுள்ளதாகப் பாகிஸ்தான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அரசின் நீண்டகால கொள்கை ரீதியிலான தீவிரவாத ஆதரவு போக்கைச் சுட்டிக்காட்டிய இந்திய அதிகாரிகள், அவர்களது நெருக்கடிகள் மற்றும் கவலைகளை நிராகரித்துள்ளனர்.

இந்தியா சொல்வது என்ன?
சிந்து நீர் ஒப்பந்தத்தின்படி சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மூன்று மேற்கு நதிகள் பாகிஸ்தானுக்கும் சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகிய கிழக்கு நதிகள் இந்தியாவுக்கும் சொந்தமாகும்.
மொத்த நீரில் 70% பாகிஸ்தானுக்கும் 30% இந்தியாவுக்கும் வழங்கப்பட்டும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிந்து நீர் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தடுக்க, இந்தியா குறைந்த கால, இடைக்கால மற்றும் நீண்டகால யுத்திகளை அறிவித்துள்ளது.
மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடிப்படையில் நிறுவப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிப்பதன் மூலம் இந்த மதிப்புகளை நசுக்கியுள்ளது" எனக் கூறியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் நிறுத்தப்பட்டாலும், தீவிரவாதத்துக்கு முடிவுகட்டுதல் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைத் திருப்பி அளித்தல் தவிர வேறெந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே சிந்து நீரின் உபரியை எப்படி செலவு செய்வது என்பது குறித்து இந்திய அரசு ஆலோசனைகள் நடத்தி வருவதாக என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது. கு
றிப்பாக கிடப்பில் இருக்கும் நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த மோடி தலைமையிலான அரசாங்கம் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முடிவை எட்டுவதற்கு அடுத்தகட்டமாகப் பாகிஸ்தான் சர்வதேச சக்திகளின் ஆதரவை நாடலாம் எனக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


