Tiktok: நேரலையிலிருந்த Mexican Influencer Marquez சுட்டுக் கொலை; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
மெக்சிகன் இன்ஃப்ளூயன்சர் Valeria Marquez டிக் டாக்கில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தபோது சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ, ஜாலிஸ்கோவின் குவாடலஜாரா நகரில் உள்ள அவரது அழகு நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது இன்ஃப்ளூயன்சர் மார்க்வெஸ், ஒரு மேஜையில் அமர்ந்து டிக் டாக் லைவ்வில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
அவரது அழகு நிலையத்திற்குத் திடீரென உள்ளே வந்த நபர் ஒருவர் அவரின் பெயரை அழைத்த பின் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக்கில் கிட்டத்தட்ட 2 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட இன்ஃப்ளூயன்சர் மார்க்வெஸ், அழகு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான தகவல்களைப் பதிவிட்டு வந்துள்ளார்.
நேரலையில் இருக்கும் போதே இன்ஃப்ளூயன்சர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 100,000 பெண்களுக்கும் 1.3 இறப்புகள் என்ற விகிதத்தில் உள்ளது.
மெக்சிகோவின் 32 மாநிலங்களில் கொலை விகிதம் அதிகமாக உள்ளது, இதில் ஜாலிஸ்கோ ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த சம்பவம் நடந்ததும் இங்குதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


