இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு; என்ன வேலை; யார் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

அலுவலக உதவியாளர்.

மொத்த காலிப் பணியிடங்கள்: 6

சம்பளம்: ரூ.15,700 - 58,100

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 34.

கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இதில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.

பின்னர், அந்த விண்ணப்பத்தை "ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, எண். 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ் நகல்கள்:

கல்வித்தகுதிச் சான்றிதழ்கள்,

அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள், கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற ஒருவரிடம் இருந்து நன்னடத்தைச் சான்றிதழ்,

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதன் பதிவு எண்,

இப்போது எதவாது பணியில் இருந்தால், அந்த நிறுவனத்தில் இருந்து தடையில்லாச் சான்றிதழ்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 28, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்கு தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்த செய்தியை பகிருங்களேன்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.