UPSC: யுபிஎஸ்சிக்கு புதிய தலைவர் நியமனம்! - யார் இந்த அஜய் குமார்?

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத் (யுபிஎஸ்சி) தலைவராக மத்திய பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். 

பிரீத்தி சுதன்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத் (யுபிஎஸ்சி) தலைவராக 2024 ஜூலை மாதம் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது யுபிஎஸ்சி புதிய தலைவராக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.  அவரது நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி இருக்கிறார். 

யார் இந்த அஜய் குமார்? 

கேரளாவைச் சேர்ந்த அஜய் குமார் ஐஐடி கான்பூரில் படித்தவர். வர்த்தக மேலாண்மை பிரிவில் பி.ஹெச்டி முடித்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ் அதிகாரியான இவர், கேரளா மாநிலத்தில் ஐடி மற்றும் மாநில மின்னணு மேம்பாட்டு கழகம் உள்ளிட்ட துறைகளின் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 

அஜய் குமார்
அஜய் குமார்

2019 ஆகஸ்ட் முதல் 2022 அக்டோபர் மாதம் வரை பாதுகாப்புத்துறை செயலாளராகப் பணியாற்றி இருக்கிறார். அது மட்டுமின்றி பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பல்வேறு டிஜிட்டல் இந்தியா திட்டங்களில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.