போர் நிறுத்தம் தற்காலிகம் தான்:நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி!
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி உள்ளார் அதில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நான் யார் என்பதை பாகிஸ்தானுக்கு காட்டுவோம் பாகிஸ்தான் நிலைத்திருக்க வேண்டும் என்றால் பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்
அதாவது நாட்டின் பலம் ராணுவ வீரர்கள் பலம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது நமது ராணுவ வீரர்களுக்கும் உளவுத்துறையினருக்கும் ஆயுதங்களை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும் எனது வணக்கங்கள் ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக நின்ற மக்களுக்கு மிகவும் நன்றி, இந்த தாக்குதலுக்கு பிறகு நம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்றனர் பயங்கரவாதிகளை தீர்த்து கட்டுவேன் என்று நான் உறுதி அளித்தேன் அதன்படியே இந்தியா தாக்குதல் நடத்தியது பெண்களின் குங்குமத்தை அடித்தால் என்ன நடக்கும் என்பதை பயங்கரவாதிகள் என்று உணர்ந்துள்ளனர்
சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது நம் இந்திய ராணுவம் அடித்த அதிரடியால் மூன்று நாட்களிலேயே இந்த போரில் இருந்து தப்பிக்கும் வழியை பாகிஸ்தான் தேடி டிஜிஎம்ஓ மூலம் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்தது அதன் காரணமாக பாகிஸ்தானுடன் எதிரான சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மீண்டும் இந்தியாவை சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பாகிஸ்தான் பார்க்க வேண்டியிருக்கும் போர் நிறுத்தம் தற்காலிகம் தான் என்று உரையாற்றியுள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


