சத்தான வெஜிடபிள் ஆம்லெட் செய்யும் முறை

இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் பலரும் காய்கறிகள் சாப்பிடுவதை விரும்புவதில்லை என்று கூறலாம். எந்த காய்கறியை கொடுத்தாலும் வேண்டாம் என்று ஒதுக்க கூடிய அளவிற்கு தான் பல குழந்தைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட குழந்தைகளும் காய்கறிகளை விரும்பி சாப்பிடும் வகையில் அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து தந்தால் போதும் அவர்களும் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். அப்படி குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு காய்கறி ஆம்லெட் பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

சுரக்காய் துருவியது – ஒரு கப்
கேரட் துருவியது – ஒரு கப்பு
உருளைக்கிழங்கு துருவியது – ஒரு கப்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
முட்டை – 2
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை

முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு கேரட் துருவது போல் துருவி ஒரு கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் கேரட்டையும் தோலை நீக்கிவிட்டு துருவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கையும் தோலை நீக்கிவிட்டு துருவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

இவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ள வேண்டும். பிறகு இதில் அரிசி மாவையும், கடலை மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், மிளகாய் தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, இரண்டு முட்டை ,ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது மாவு தயாராகிவிட்டது
அடுப்பில் ஒரு சிறிய பேனை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி அளவு மட்டும் இந்த மாவை எடுத்து ஊற்ற வேண்டும். இதை தோசை போல் இழுவக்கூடாது. இப்படி சிறு சிறு தோசைகள் ஆக நாம் ஒவ்வொரு கரண்டியை பயன்படுத்தி ஊற்றி ஒரு புறம் வெந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபுறமும் வேகவைத்து எடுத்துக் கொடுத்தால் போதும் எளிமையான அதே சமயம் ஆரோக்கியமான காய்கறி ஆம்லெட் தயாராகிவிட்டது.

இந்த மூன்று காய்கறிகளை தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. தங்களுடைய வீட்டில் எந்த காய்கறிகளை யாரும் சாப்பிடாமல் தவிர்க்கிறார்களோ அந்த காய்கறிகளை பயன்படுத்திக் கூட இந்த முறையில் நாம் ஆம்லெட்டை தயார் செய்து தரலாம். மேலும் இதை மாலை நேர சிற்றுண்டியாகவும், காலை நேர உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சத்தான பச்சை பயிறு குளிர்பானம்

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகளை விரும்பி சாப்பிடாதவர்களுக்கு இப்படி காய்கறி ஆம்லெட் செய்து தருவதன் மூலம் அந்த காய்கறிகளை தாங்களே அறியாமல் சாப்பிட்டு விடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

The post சத்தான வெஜிடபிள் ஆம்லெட் செய்யும் முறை appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.