IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தமா? - வெளியாகும் தகவல் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி இருக்கிறது.

ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

பஞ்சாப் vs டெல்லி

பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருவதால் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுமா? என்று சந்தேகம் எழுந்த நிலையில் பிசிசிஐ இன்று முக்கிய ஆலோசனையை  மேற்கொண்டது.

பிசிசிஐ
பிசிசிஐ

இந்நிலையில் ஆலோசனையின் முடிவில் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளதாக பிசிஐ செய்தி நிறுவனம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.