Ajith: அவர் மிகவும் ஜாலியான, எளிமையான மனிதர் - அஜித் குறித்து நெகிழும் தாமு

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான (2025) விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.

நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு

பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த  ஏப்ரல் 28 ஆம் தேதி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையில் நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் அஜித்தைச் சந்தித்தது குறித்து செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

விருது பெறும் செஃப் தாமு
விருது பெறும் செஃப் தாமு

“ பத்மஸ்ரீ விருதைப் பெறுவதற்காக சென்றபோது ராஷ்டிரபதி பவனில் நடிகர் அஜித்தை சந்தித்தேன். நானும் எனக்கு மிகவும் பிடித்த நடிகரும் பத்ம விருதுகளைப் பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. அஜித் மிகவும் ஜாலியான, எளிமையான மனிதர்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.   

View this post on Instagram

A post shared by Damodaran Kothandaraman (@chef_damu)

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.