Deepika Padukone: மகளுக்கு `துவா எனப் பெயர் வைத்தது ஏன்? - தீபிகா பகிர்ந்த சுவாரஸ்யம்!

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு துவா (Dua) எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

Deepika Padukone - Ranveer Singh

சமீபத்தில் தீபிகா கலந்துகொண்ட யூடியூப் நிகழ்ச்சியில் தனது கர்ப்பகாலம் மிகவும் சிக்கலாக இருந்ததாக கூறியுள்ளார். கர்ப்ப காலத்தின் கடைசி 3 மாதங்களில் எதிர்கொண்ட பிரச்னைகளையும், பிறந்த குழந்தையின் தாயாக எதிர்கொண்ட சவால்களையும் பற்றிப் பேசியுள்ளார்.

Deepika Padukone சொன்னதென்ன?

துவாவுக்கு பெயர் சூட்டியது பற்றி, "நாங்கள் முதலில் அவளைக் கையில் ஏந்தி அவள், இந்த உலகை அனுபவிக்க அனுமதிக்க வேண்டியது முக்கியம் எனக் கருதினோம்.

அவளது ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாக வளர வளர அவள் எங்களுக்கு என்ன அர்த்தம் தருகிறாள், எதற்காக அதை உணர்த்துகிறாள் என்பதை சுருக்கமாக அறிந்தோம்." எனப் பேசினார்.

View this post on Instagram

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

Dua Padukone Singh

இறுதியாக தங்களது மகள் தங்களது பிரார்த்தனைகளுக்கு எல்லாம் பதிலாக வந்து சேர்ந்திருப்பதாகவும், அதனால் அவளுக்கு பிரார்த்தனை என்றே அர்த்தப்படும் வகையில் துவா எனப் பெயர் வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.