ஒவ்வொரு முறையும் அவளை அழைக்கும் போது... - குழந்தைக்கு சிந்தூரி எனப் பெயரிட்ட பீகார் தம்பதி

பீகாரைச் சேர்ந்த தம்பதி தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் சிந்தூரின் பெயரிலிருந்து எடுத்து சிந்தூரி’ என்று பெயரிட்டுள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதிகாலை ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை (Operation Sindoor) நடத்தியது. இது கடந்த ஏப்ரல் மாதம் 22 தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியாகும்.

Operation Sindoor

இந்திய ராணுவத்தின் இந்தச் செயலுக்கு நாட்டு மக்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், தேசபக்தி ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த தம்பதியினர், தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு சிந்துரி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த பெயர் ஆபரேஷன் சிந்தூரின் பெயரிலிருந்து எடுத்து வைத்துள்ளனர்.

பீகார் மாநிலம் கதிஹார் நகரத்தின் பால்தி மகேஷ்பூர் கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ் மண்டல் மற்றும் ராக்கி குமாரி தம்பதிக்கு அங்கு உள்ள மருத்துவமனையில் மே 7 ஆம் தேதி காலை 9 மணிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

மே7 ஆம் தேதி தான் இந்திய ராணுவத்தால் ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.

தேசபக்தி காரணமாக அந்த தம்பதியினர் அந்தக் குழந்தைக்கு ”சிந்தூரி” எனப் பெயரிட்டுள்ளனர்.

இது குறித்து பெண் குழந்தையின் தாத்தா குந்தன் மண்டல் ”தி பிரிண்ட்” ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ”குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்தப் பெயரால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாங்கள் ஒவ்வொரு முறையும் அவளுடைய பெயரைச் சொல்லும்போது, ​​இந்தியா, பாகிஸ்தானுக்குக் கொடுத்த பதிலடி செய்தியை நினைவுபடுத்துவோம்.

சிந்தூரி வளர்ந்ததும், அவள் இந்திய ராணுவத்தில் சேருவாள்” என மகிழ்ச்சி பொங்கக் கூறியிருக்கிறார்.

இதேபோல் கொரோனா தொற்று காலத்தில் சத்தீஸ்கரில் ஒரு தம்பதி தங்களுக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்குக் கொரோனா மற்றும் கோவிட் என்று பெயரிட்டனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு குடும்பம் அவர்களின் ஆண் குழந்தைக்கு ”லாக் டவுன் யாதவ்” என்றும் பெயரிட்டனர். இந்த வரிசையில் பீகாரில் உள்ள இந்த தம்பதியினர் இந்திய ராணுவத்தைப் போற்றும் வகையில் ”சிந்தூரி” எனப் பெயரிட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.