ஆப்ரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான்-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் வேட்டையாடிய இந்திய ராணுவம்!
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியானர் இதற்கான பதிலடி யை இந்தியா இன்று மே 7 அதிகாலை 1.05 மணியளவில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தனது தாக்குதலை தொடங்கியது
குப்வாரா மற்றும் ரஜோரி-பூஞ்ச் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் இராணுவ நிலைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை இந்திய ராணுவம் ஏற்படுத்தியது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயர் வைத்ததற்கான காரணம் திருமணமான பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் திலகத்தின் பெயர் சிந்தூர் என அழைக்கப்படும்
காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தங்களின் கணவரை இழந்து நெற்றித் திலகத்தை தியாகம் செய்த தாய்மார்களின் கண்ணீருக்கு நியாயம் தர நடத்தப்பட்ட தாக்குதல் இது எனவே ஆபரேஷன் சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது இதனை பிரதமர் நரேந்திர மோடியே சூட்டினார்
இந்திய ராணுவம் பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரியின் குடும்பத்தினரில் 10 பேர் பலியானர் மேலும் இந்தியா பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படைகள் நுழைந்து 24 ஏவுகணைகள் டிரோன்கள் மற்றும் குண்டுகளை பயன்படுத்தி 23 நிமிடங்களில் அதிரடி தாக்குதலை நடத்தியது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


