சூர்யா 45 படத்தின் டைட்டில்... பிறந்த நாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

ரெட்ரோவுக்கு கிடைத்த வரவேற்புகளில் மகிழ்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இன்னொரு பக்கம் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்து வரும் சூர்யா 45 படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.

trisha

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் சூர்யாவின் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். சூர்யா, த்ரிஷா ஜோடி இதற்கு முன் மௌனம் பேசியதே, ஆறு, மன்மத அன்புவில் ஒரு பாடல்... பின்னர் இப்போது சூர்யா 45ல் இணைந்துள்ளனர்.

இதில் யோகிபாபு, நட்டி நட்ராஜ், லப்பர் பந்து சுவாசிகா. நெடுஞ்சாலை ஷிவதா, மலையாளத்தில் ஹோம் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இந்திரன்ஸ் என பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

rj பாலாஜி

பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கோவையைத் தொடர்ந்து சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் ஈ.சி.ஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்டமான திருவிழா செட் அமைக்கப்பட்டு, சூர்யா - த்ரிஷா ஜோடியின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பிரசாத் லேப்பிலும் அரங்கம் அமைத்து சூர்யா, த்ரிஷா காம்பினேஷனில் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

டைட்டில் கிளிம்ஸ்

ஆர்.ஜே.பாலாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மீதமிருக்கின்றன என்றும் ரெட்ரோவில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் பேசப்பட்டது போல, இதில் த்ரிஷாவின் ரோல் பேசப்படும் என்கிறார்கள்.

suriya

வரும் ஜூலை மாதத்தில் சூர்யாவின் பிறந்த நாள் வருகிறது. அன்று படத்தின் டைட்டில் கிளிம்ஸ் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. பேட்டைக்காரன், கருப்பு என சில டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சூர்யாவின் ரெட்ரோ தியேட்டர்களில் ஓடி வருவதால், அடுத்த மாதத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஜூலையில் லக்கி பாஸ்கர் இயக்கத்தில் வெங்கி அட்லூரி படப்பிடிப்பிற்கு சூர்யா செல்கிறார் என்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.