``படித்துக்கொண்டே நடிக்கிறேன்... தெலுங்கு கற்றுவருகிறேன் - லவ் டுடே நடிகை இவானா

லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் இவானா. தொடர்ந்து பலத் தமிழ் படங்களில் நடித்துவரும் இவர், தற்போது ஸ்ரீ விஷ்ணு நடித்துள்ள "சிங்கிள்" படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவிருக்கிறார்.

கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற 9-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தது குறித்து தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில், ``கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி. ஸ்ரீ விஷ்ணு, வெண்ணிலா கிஷோர், கெட்டிகாவுடன் சேர்ந்து பணியாற்றியது அழகான தருணம்.

இவானா

இந்தப் படத்தில் ஹரினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹரினி ஒரு நடன கலைஞர். எனக்கு நடனமாடுவது பிடிக்கும் என்பதால் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தற்போது நான் பி.ஜி படித்துக் கொண்டிருக்கிறேன். நான் படித்துக் கொண்டே சினிமாவில் நடித்தும் வருகிறேன். எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. தற்போது நடிக்கும் சிங்கிள் படத்திற்காக தெலுங்கு மொழியை கற்றேன்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.