கவன ஈர்ப்பு போராட்டம்:தமிழக பாஜக அறிவிப்பு!பரவும் ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகள்!
காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று சுற்றுலாப் பயணிகளை மதத்தை கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற கொடூரமான செயல் உலக நாடுகளை உலுக்கியது இந்த சம்பவத்தை கண்டித்து நாளை கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஷ்மீர் பகுதியின் அமைதியை கெடுக்க சதி திட்டங்கள் தீட்டும் குழுக்களை உள்நாட்டிலேயே எல்லை தாண்டியும் கண்டறிந்து அவர்கள் மீது சமரசம் இல்லாத முறையில் நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது தமிழகத்தில் நமது ராணுவத்தை சந்தேகித்தும், நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் சர்ச்சைகள் எழுப்பும் விதமாகவும் சிலர் அவதூறுகளைப் பரப்ப முயல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். திமுக அரசை விமர்சனம் செய்தால் உடனே கைது, தங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு, பாஜக-வினர் உட்பட எதிர்க்கட்சிகள் மீது காவல்துறையை ஏவி அச்சுறுத்தல் என சர்வாதிகார போக்கைக் கையாளும் திமுக ஆட்சியில்தான் தேச இறையாண்மைக்கு விரோதமாகவும், நமது இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாகவும் பதிவிடுபவர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள். சற்று சிந்தித்துப் பார்த்தால் திமுக அரசே அவர்களை சீராட்டி வளர்ப்பது போல் உள்ளது
ஆகவே, பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான் வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மே 5-ஆம் தேதியன்று ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை அறிவித்துள்ளோம் என்று கூறியுள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


