ராயல் என்பீல்ட் ‘ஹண்டர் 350’ புதிய மாடல் அறிமுகம் - புதிய சஸ்பென்சன், எல்இடி லைட் உள்ளிட்ட நவீன வசதிகள்
சென்னை: புதிய சஸ்பென்சன், எல்இடி லைட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ராயல் என்பீல்ட் நிறுவனம் புதிய புல்லட் ‘ஹண்டர் 350’ மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் 350, மீட்டியர் 350, ஹிமாலயன் போன்ற மாடல்கள் வாகன ஓட்டிகளிடம் கவனம் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக ‘ஹண்டர் 350’ மாடல் 2022 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் மேம்படுத்தப்பட்ட மாடல் வகை நேற்று முன்தினம் டெல்லி மற்றும் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. டேப்பர் கிரே, ரிபல் ப்ளூ வகைகளுடன் புதிதாக டோக்கியோ பிளாக், லண்டன் ரெட், ரியோ வைட் ஆகிய நிறங்களில் 2025-ம் ஆண்டின் ‘ஹண்டர் 350’ அறிமுகமாகியுள்ளது. புதிய சஸ்பென்சன், எல்இடி லைட், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், வழிகாட்டும் டிரிப்பர் என பல்வேறு நவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


